திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

திருச்சுழியில்  விவசாயிகளுக்கு கையேடு

திருச்சுழி அருகே பண்ணை மூன்றடைப்பு, தொட்டியன்குளம், மணவராயனேந்தல், தம்மநாயக்கன்பட்டி, புரசலூர் உட்பட பல கிராமங்களில், எம்.ரெட்டியபட்டி வேளாண்துறை சார்பாக, ஒருங்கிணைந்த கையேடு வழங்கும் விழா நடந்தது.

Updated On :2 ஜூன் 2013, 6:50 pm

திருச்சுழி அருகே பண்ணை மூன்றடைப்பு, தொட்டியன்குளம், மணவராயனேந்தல், தம்மநாயக்கன்பட்டி, புரசலூர் உட்பட பல கிராமங்களில், எம்.ரெட்டியபட்டி வேளாண்துறை சார்பாக, ஒருங்கிணைந்த கையேடு வழங்கும் விழா நடந்தது.

 வேளாண் உதவி இயக்குனர் நாச்சியாரம்மாள் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர்கள் உதயகுமார், ராஜேந்திரன், எர்ரம்ம நாயக்கர், தனலட்சுமி, வள்ளி முன்னிலை வகித்தனர். தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி வரவேற்றார். விற்பனைத் துறை வேளாண் அலுவலர் சந்திரசேகரன், பொறியியல் துறை முருகேஷ், கோபிநாத், மீன்வளத்துறை அலுவலர் கோவிந்தன், ரத்தினகுமார் பேசினர்.

மண் மாதிரி எடுத்தல், மண்புழு உரம் தயாரித்தல், விதை நேர்த்தி செய்தல் பற்றி, விவசாயிகள் செயல் விளக்கம் அளித்தனர். அட்மா தொழில்நுட்ப மேலாளர் பிரேமா விளக்கினார். ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர்கள், தோட்டகலை அலுவலர்கள் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.